Map Graph

தண்டீசுவரர் கோவில்

இந்தியாவில் கோவில்

தண்டீசுவரர் கோயில் என்பது சென்னை புறநகர்ப் பகுதியான வேளச்சேரியில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இந்தக் கோயிலில் பல்லவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு சோழர் ஆட்சிக்காலத்தில் பழுது பராமரிக்கும் பணியும் புதுப்பித்தல் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் ஒரு முதன்மைக் கோபுர வளாகமும் தெப்பக்குளமும் உள்ளது. இந்தக் கோயில் வேளச்சேரி முதன்மைச் சாலையில் அமைந்துள்ள குரு நானக் கல்லூரியிலிருந்து கிழக்கு நோக்கிய சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துளள்து. இந்தக் கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

Read article